சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கொடைக்கானலில் சர்வதேச தனியார் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு யோகா பயிற்சியளிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இந்திய சுற்றுலா அமைச்சகத்தின் தென் மண்டல அலுவலகம் மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை இணைந்து சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கொடைக்கானல் 7 ரோடு பகுதியில் அமைந்துள்ள சர்வதேச தனியார் பள்ளியில் யோகா பயிற்சி நடத்தப்பட்டது, இந்த பயிற்சியில் யோகா செய்வதன் நன்மைகள் குறித்தும், யோகாவின் முக்கியத்துவம் குறித்தும் யோகா மாஸ்டர்களால் எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் பத்மாசனம்,வீராசனம், யோகமுத்ரா,உத்தீதபத்மாசனம், சானுசீரானம்,பஸ்திமோத்தாசனம், உத்தானபாத ஆசனம், நவாசனம் உள்ளிட்ட யோகா பயிற்சி அளிக்கப்பட்டது, இந்த நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர், மேலும் இந்த பயிற்சியில் ஈடுபட்ட அனைவருக்கும் பாராட்டுகளும் சான்றிதழ்களும், யோகா மேட் டி-ஷர்ட் தொப்பிகளும் வழங்கப்பட்டது, இந்த நிகழ்வில் நகராட்சி ஆணையாளர், சுற்றுலாத்துறை அலுவலர், சுற்றுலா துறை துணை அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story