தேசிய கணிதவியல் தினக் கொண்டாட்டம்

தேசிய கணிதவியல் தினக் கொண்டாட்டம்

நாமக்கல் டிரினிடி மகளிர் கல்லூரியில் தேசிய கணிதவியல் தினக் கொண்டாட்டம்

நாமக்கல் டிரினிடி மகளிர் கல்லூரியில் தேசிய கணிதவியல் தினக் கொண்டாட்டம்

நாமக்கல் டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணிதவியல் துறையின் சார்பில் தேசிய கணிதவியல் தினக் கொண்டாட்டம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கல்லூரி செயல் இயக்குநர் அருணா செல்வராஜ் தலைமை தாங்கினார். முதல்வர் எம். ஆர். லட்சுமிநாராயணன் முன்னிலை வகித்தார்.

கணிதமேதை இராமானுஜனின் பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவியருக்கு கணிதவியல் தொடர்பான பேச்சுப்போட்டிகள், சுவரொட்டிப் போட்டிகள் மற்றும் ஒளியியல் மற்றும் ஒலியியல் காட்சிப் போட்டிகள் நடத்தப்பட்டன. இவ்வுலகிற்கு பூஜ்யத்தினை அறிமுகம் செய்தது இந்தியர்கள் தான் என்பதையும், கணிதத்தில் பல கண்டுபிடிப்புகளை இந்த உலகத்திற்கு இந்தியா அளித்துள்ளது என்பதையும், இராமானுஜன் எண் என கூறப்படும் 1729-ன் சிறப்பம்சம் குறித்தும், இராமானுஜனின் கணித சூத்திரங்கள் மற்றும் சமன்பாடுகள் எவ்வாறு பல துறைகளுக்கு உதவிபுரிந்து வருகிறது என்பதையும் மாணவியர் மிகவும் சிறப்புடன் இப்போட்டிகளில் எடுத்துரைத்தது பார்வையாளர்களை மிகவும் வெகுவாகக் கவர்ந்தன. இப்போட்டிகளை கல்லூரியின் கணிதவியல் துறைப் பேராசிரியப் பெருமக்கள் பி.லேனா, எஸ். ஜெயந்தி, வீ. கோகிலா, எஸ். மதுக்கரைவேணி, பி. கார்த்திகேயனி, எம்.நந்தினி, ஏ. தேன்மொழி, எஸ். ரேவதி ஆகியோர் நடத்தினர். நிகழ்ச்சியில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Tags

Next Story