உணவை ஊட்டி மகளிர் தின கொண்டாட்டம்
ஈரோட்டில் உள்ள வேதாஸ் ஓட்டல் மகளிர் தினத்தை முன்னிட்டு வித்தியாசமான ஒரு போட்டியை அறிவித்துள்ளது.இதன்படி 6 ம் தேதி முதல் வரும் 18 ம் தேதி வரையிலான நாட்களில், நங்கள் ஓட்டலில் மாமியார் மருமகள் இருவரும் ஒன்றாக சாப்பிட வர வேண்டும். இருவரும் பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் உணவை தனது கைகளால் ஊட்டி விட வேண்டும். உணவை மிச்சம் வைக்கக்கூடாது என்பது முக்கிய நிபந்தனையாகும்.
இப்படி இருவரும் சாப்பிடும் உணவுக்கு பில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதையொட்டி, பல மாமியார்கள் தங்கள் மருமகள்களுடனும், மருமகள்கள் தங்கள் மாமியாருடனும் வந்து சாப்பிட்டனர இதனையடுத்து உணவகத்திற்கு வந்த மாமியார் - மருமகள் அசைவ உணவை வகைகளான மட்டன் பிரியாணி , சிக்கன் லாலிபாப் , நான் , சிக்கன் கிரேவி போன்றவற்றை ஆர்டர் செய்து போட்டியின் விதிகளின் படி தனது கைகளால் ஊட்டி , மிச்சம் வைக்காமல் சாப்பிட்டனர்.
இதற்கு ஓட்டல் நிர்வாகத்தினரும் சாப்பிட்டதற்கு உண்டான தொகையை வாங்கவில்லை .. வீடுகளில் அன்பை பகிர்ந்து கொள்வது குறைந்து வருவதால் , சிறு விஷயங்கள் கூட சர்ச்சையை ஏற்படுத்தி, குடும்பத்தில் அமைதியை குலைப்பதால் இதுபோன்ற போட்டியை அறிவித்தாக ஓட்டல் நிர்வாகத்தினரான பூபதி தெரிவித்தினர்.