உலக மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாட்டம்
ஊத்தங்கரை பகுதியில் உலக மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகல் நேர பராமரிப்பு மையத்தில் உலக மாற்றுத்திறனாளி தினத்தை முன்னிட்டு பல்வேறு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஆசிரியை உமா தலைமை தாங்கினார். பகல் நேர பராமரிப்பு மையத்தில் படிக்கும் மாற்றுத் திறனாளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு புத்தாடைகள், நிதி உதவி உட்பட பல்வேறு நல உதவிகளை பட்டைய கணக்காளர் ஜெய்சுதா, உதவி தலைமை ஆசிரியர் கணேசன் ஆகியோர் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான பொறுப்பாசிரியர்கள் வைரியம்மாள், கோகிலா, மாதம்மாள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்களுடைய தனித்திறமையை வெளிக்காட்டும் விதமாக ஓவியம் வரைதல், பாட்டு பாடுதல், நடனம் ஆடுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாற்று திறனாளிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. கடந்த பதினைந்து ஆண்டுகளாக உலக மாற்றுத்திறனாளி தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நல உதவிகள் வழங்கி கொண்டாடி வருவதாக ஆசிரியர் கணேசன் கூறினார்.
Next Story