நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா
நுகர்வோர் உரிமைகள் தின விழா
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா தலைமை வகித்துப் பேசும்போது, நுகர்வோர் அனைவரும் தங்களின் உரிமைகள் பற்றி முழுமையாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும், அந்த உரிமைகள் பாதிக்கப்படும்போதுகிடைக்கும் இழப்பீடுகள் குறித்தும் அறிந்து வைத்திருக்க வேண்டும் என்றார். முன்னதாக, மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கவிதை, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வென்றோருக்கும் ஆட்சியர் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். நிகழ்ச்சியில், மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வே பாதுகாப்பு அலுவலர் கு. சாந்தி, கூட்டுறவு இணைப்பதிவாளர் (முழுக்கூடுதல் பொறுப்பு) மு. தனலட்சுமி, பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளர் ராஜவேல், நுகர்பொருள் வாணிபக் கழகத் துணைமேலாளர் கே. பன்னீர்செல்வம், புதுக்கோட்டை நுகர்வோர் அமைப்பின் தன்னார்வலர் து. லதா உத்தமன், அறந்தாங்கி நுகர்வோர் அமைப்பின் செயலர் அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
Next Story