பாபநாசம் தீயணைப்பு நிலையத்தில் தீ தொண்டு நாள் அனுசரிப்பு

பாபநாசம் தீயணைப்பு நிலையத்தில் தீ தொண்டு நாள் அனுசரிப்பு .
1944 ஆம் ஆண்டு மும்பையில் உள்ள துறைமுகத்தில் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டு கப்பல் வெடித்து சிதறியது. அப்போது தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 66 வீரர்கள் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து வீர மரணம் அடைந்த தேவையான அனைத்து வீரர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசு ஏப்ரல் 14ஆம் தேதி நீத்தார் நினைவு தினமாக தேசிய அளவில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று பாபநாசம் தீயணைப்பு நிலையத்தில் சிறப்பு நிலை அலுவலர் முருகானந்தம் மற்றும் தீயணைப்புபடை வீரர்கள் வீர மரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களின் புகைப்படங்களுக்கு மலர் வளையம் வைத்து மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினர். மேலும் பாபநாசம் புதிய பேருந்து நிலையத்தில் மக்கள் கூடும் இடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்து வகையில் தீ விபத்து தடுப்பு குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.

Tags

Read MoreRead Less
Next Story