விருதுநகரில் வணிகர் தின விழா கொண்டாட்டம்

விருதுநகரில் வணிகர் தின விழா கொண்டாட்டம் நடந்தது.

வணிக நகரமான விருதுநகரில் வணிகர்கள் தினத்தை முன்னிட்டு மெயின் பஜார் வியாபாரிகள் சங்கம் சார்பாக ஊர்வலமாக காமராஜர் இல்லம் சென்று காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழகம் முழுவதும் மே 5ம் தேதி வணிகர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது, அதனை முன்னிட்டு இன்று வணிக நகரமான விருதுநகரில், மெயின்பஜார் வியாபாரிகள் சங்கம் சார்பாக வணிகர்கள் ஒன்று இனைத்து சேதபந்து மைதானத்தின் உள்ள மாரியம்மன் கோவில் முன்பு இருந்து ஊர்வலமாக வந்து மெயின் பஜாரில் உள்ள சங்க அலுவலகம் முன்பு சங்க கொடியை தொழிலதிபர் முரளி ஏற்றி வைத்தார்.

பின்பு நம்மை நாம் மதிப்போம் வாழ்த்தட்டும் தலைமுறை, என்றும் உங்கள் வியாபார நண்பனாக, (நா) நயம் மிக்கவர்கள் என வணிகர்கள் வாடிக்கையாளர்களிடம் உண்மையாக நடக்க வேண்டும், வணிகர்களுக்கு நடத்தை நாணயம் இருந்தால் தான் வாணிபத்தில் நிலைத்து நாணயம் சம்பாதிக்க முடியும், எளிமையே வலிமை துணிவே வெற்றி போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வணிகர்கள் நடைபயண பேரணியில் கலந்து கொண்டனர் இந்த நடைபயண பேரணியானது விருதுநகர் மெயின்பஜாரில் தொடங்கி தெப்பம் வழியாக விருதுநகர் காமராஜர் நினைவு இல்லத்தில் நிறைவு அடைந்தது அதை தொடர்ந்து காமராஜரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

Tags

Next Story