உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா
தென்காசியில் நடைபெற்ற உலக நுகர்வோர் உரிமைகள் தின விழாவில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்டம் தென்காசியில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் நேற்று தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா தென்காசி கலெக்டர் கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நரசிம்மன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜேஷ், உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் பங்கேற்றனர்.
Next Story