செல்போன் பழக்கம் - கொள்ளையனாக மாறிய நண்பன் கைது
கைது செய்யப்பட்ட அலெக்சாண்டர்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பெலாகுப்பம் ரோடு பகுதியை சேர்ந்தவர் பழனி மகன் சுரபி (வயது 32). இவரும், அரியலூர்மாவட்டம் ஆண்டிமடம் தாலுகா ஓலையூர் பகுதியை சேர்ந்த முருகன் மகன் அலெக்சாண்டர் (26) என்பவரும் செல்போன் மூலம் நபர்களாக பழகி வந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று அலெக்சாண்டர், சுரபியை செல்போனில் தொடர்பு கொண்டு தான் திண்டிவனத்தில் திருமண நிகழ்ச்சிக்கு வந்து இருப்பதாகவும், தங்களை நேரில் பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.
உடனே சுரபியும் அவரை தனது வீட்டுக்கு வரும்படி கூறினார். இதையடுத்து சுரபியின் வீட்டுக்கு வந்த அலெக்சாண்டர் திடீரென சுரபியிடம் கத்தியை காட்டி மிரட்டி வீட்டில் இருந்த 10½ பவுன் நகைகளை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் இது குறித்து சுரபி கொடுத்த புகாரின் பேரில் ரோசனை போலீசார் வழக்குப்பதிவு செய்து அலெக்சாண்டரை கைது செய்து அவரிடம் இருந்து 9½ பவுன் நகைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் திண்டிவனத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.