சேலம் மத்திய சிறை கைதியிடம் செல்போன் பறிமுதல்
சேலம் மத்திய சிறை
சேலம் மத்திய சிறையில் கொலை வழக்கு கைதியிடம் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சேலம் மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என 900க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த கைதிகளின் அறைகளில் சிறை காவலர்கள் அவ்வப்போது திடீர் சோதனை நடத்தி செல்போன், கஞ்சா உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில், சேலம் மத்திய சிறையில் நேற்று காலை கைதிகளின் அறைகளில் சிறை காவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கொலை வழக்கில் கைதான மோகன் அடைக்கப்பட்டுள்ள 2ம் வகுப்பு அறையில் சோதனை செய்தனர். மோகன் அணிந்திருந்த வேட்டிக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த செல்போன் பேட்டரியை பறிமுதல் செய்தனர். இவருக்கு செல்போன் எப்படி வந்தது. யார் கொடுத்தது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இதுபற்றி அஸ்தம்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Tags
Next Story