சீவலப்பேரி அருகே செல்போன் பறிப்பு : போலீசார் விசாரணை
காவல் நிலையம்
சீவலப்பேரி அருகே இரவில் பேருந்துக்கு காத்து கொண்டிருந்தவரிடம் பணம் செல்போன் பறித்தவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி அருகே உள்ள சந்தைப்பேட்டையை சேர்ந்த இப்ராஹிம் என்பவர் நேற்று (ஜூன் 17) இரவு மணிகூண்டு பகுதியில் பேருந்துக்காக காத்து கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த மூன்று நபர்கள் அவரை தாக்கி அவரிடம் இருந்து செல்போன், பணம் உள்ளிட்டவற்றை பறித்து சென்றனர்.
இது குறித்து பாளையங்கோட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story