பேன்சி கடையில் செல்போன் திருட்டு - வாலிபரின் வீடியோ வைரல்!

திருப்பூர், போயம்பாளையம் பகுதியில் உள்ள பேன்சி கடையில் செல்போனை திருடிச் சென்ற வாலிபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருப்பூர் போயம்பாளையம் ராஜா நகரை சேர்ந்தவர் சுரேஷ். இவர் போயம்பாளையம் நால்ரோடு பஸ் நிறுத்தம் அருகே பேன்சி கடை வைத்துள்ளார். இந்த கடையில் இரண்டு பெண் ஊழியர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் பொருட்கள் வாங்குவது போல் உள்ளே சென்ற வாலிபர் ஒருவர் சிறிது நேரம் அங்கிருந்த பொருட்களை பார்த்து அதன் விலையை கேட்டுள்ளார்.

அப்போது கடைக்கு பொருட்கள் வாங்க வந்த மற்ற நபர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது பெண் ஊழியரின் செல்போன் ஒன்று கடையின் டேபிள் மேல் இருந்தது.இதனை அந்த வாலிபர் நைசாக எடுத்து தனது பாக்கெட்டில் வைத்துக் கொண்டு வெளியே சென்றுள்ளார். சிறிது நேரத்தில் செல்போனை காணாமல் பதறிய பெண் ஊழியர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அந்த வாலிபர் திருடி சென்றது தெரிய வந்தது.

அந்த நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் டேபிள் இருந்த செல்போனை திருடிவிட்டு, செல்போனில் பேசுவது போல் நடித்துக்கொண்டே அந்த இரு நபர்களைக் கடந்து, செல்போனை திருடிக்கொண்டு வெளியே சென்றது சிசிடிவி கட்சியில் பதிவாகி இருந்தது. இது தொடர்பாக புகாரின் பேரில் அனுப்பர்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story