சேலத்தில் செல்போன் திருடியவர் கைது
செல்போன் திருட்டு
சேலத்தில் விடுதியில் செல்போன் திருடியவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம் கருமந்துறை தேக்கப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அஜீத். இவர் சேலத்தில் உள்ள ஒரு விடுதியில் தங்கி தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று அஜீத் அறையை திறந்து வைத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது அவர் செல்போன் திருட்டு போனது. இது குறித்த புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கும் விடுதி பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் கோவை என்.ஜி.ஜி.ஓ. காலனி பகுதியை சேர்ந்த சிங்காரவேலன் (வயது 46) என்றும், அவர் செல்போன் திருடியதையும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story