சிமெண்ட் சாலை அமைக்கும் பணி - ஆட்சியர் ஆய்வு

சிமெண்ட் சாலை அமைக்கும் பணி - ஆட்சியர் ஆய்வு

ஆட்சியர் ஆய்வு 

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தொண்டமாந்துறை ஊராட்சியில் ரூ.8.14 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாயுடன் கூடிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தொண்டமாந்துறை ஊராட்சியில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் (2023-24)கீழ் சிமெண்ட் சாலை அமைத்தல் உள்ளிட்ட 05 பணிகள் ரூ.47.20 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இப்பணிகளில் ஒன்றான தொண்டமாந்துறை அம்பேத்கர் தெருவில் ரூ.8.14 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சாலையினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர், சாலையின் இருபுறமும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மரியதாஸ், செல்வமணியன், வட்டாட்சியர் மாயகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story