மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
X
 கண்டன ஆர்பாட்டம் 
விருதுநகரில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மதுரை ரோட்டில் அமைந்துள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சார்பாக, அனைத்து மத்திய, மற்றும் நகர கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு 20% ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும், கேரளா மாநிலம் போல், தமிழ்நாட்டில் உள்ள 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி ஆகியவற்றை இணைத்து தமிழ்நாடு வங்கியாக உருவாக்கிட வேண்டும்,கடந்த எட்டு ஆண்டுகளாக (2015 முதல்) பணியில் சேர்ந்த SRB & DRB ஊழியர்களுக்கு வெளியிடாத முதுநிலை பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும் திருநெல்வேலி, சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு கடந்த ஒப்பந்தத்தில் ஏற்றுகொள்ளப்பட்ட மிகுதி 5% உயர்வு வழங்கிட வேண்டும், வங்கி ஊழியர்களின் கடன்களுக்கு ஏற்கனவே இருந்த வந்த வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்,உதவி மேலாளர் பதவி உயர்வில் மூன்றுக்கு ஒன்று என்ற நடைமுறையை ரத்து செய்திட வேண்டும். நகர கூட்டுறவு வங்கிகளை மாவட்ட அளவில் ஒருங்கிணைத்து பலப்படுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளைவலியுறுத்தி இன்றும், நாளையும் என இரண்டு நாள்கள் மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் அதனை முன்னிட்டு இன்று விருதுநகரில் உள்ள மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கி முன்பு ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story