பிரதமர் பொதுக்கூட்ட பகுதியில் மத்திய இணை அமைச்சர் ஆய்வு.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூர் பகுதியில் பாஜக மாநில தலைவர் மேற்கொண்ட எம்எல்ஏ என் மக்கள் யாத்திரை நிறைவு விழா மாநாட்டில் பாரத பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார் இதற்கான பணிகள் திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூர் பகுதியில் நடைபெற்று வருகிறது சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் மேடை அமைக்கப்பட்டு 5 லட்சம் பேர் வரை அமரக்கூடிய வகையில் இருக்கையில் போடப்பட்டுள்ள நிலையில் மத்திய பாதுகாப்பு படை காவல்துறை கண்காணிப்பில் மைதானம் முழுதும் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் முன்னேற்பாடு பணிகள் குறித்து மத்திய இணை அமைச்சர் எல் முருகன் மற்றும் பாஜக மேல் இட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இணை அமைச்சர் எல் முருகன், திருப்பூரில் பிரதமர் மோடி கலந்து கொள்கின்ற என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழா மாநாடு மிகப்பெரிய திருவிழாவாக கொண்டாடப்பட உள்ளது. இதுவரை தமிழகத்தில் எந்த ஒரு அரசியல் கட்சியும் நிகழ்த்தாத நிகழ்வாக நிறைவு விழா மாநாடு அமையும் , என் மண் என் மக்கள் யாத்திரை செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் மிகப்பெரிய உற்சாகத்தை தந்துள்ளன.
வெற்றி விழா யாத்திரைக்குப் பிறகு 20 ஆண்டுகளுக்குப் பின் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றது போல என் மண் என் மக்கள் யாத்திரைக்குப் பிறகு 40 நாடாளுமன்ற தொகுதிகளையும் வெல்வோம். தமிழகத்தில் 40 தொகுதிகளை வெல்வோம் நிச்சயமாக இந்தியாவில் 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியமைப்பது உறுதி. திமுக ஆட்சியில் ஏற்கனவே ஒரு அமைச்சர் சிறையில் உள்ளார். ஒருவர் பதவி இழந்துள்ளார். இன்னொருவர் மீது விசரானைக்கு உத்தரவிபடப்பட்டுள்ளது.
நீதிமன்றம் ஊழல் வழக்குகளை பட்டியலிட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாஜக எந்த கட்சியையும் உடைக்கவில்லை. பிரதமர் வேகமாக நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறார். இதனை மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள் இதனால் ஆதரவு அளிக்கின்றனர் என பேட்டி அளித்தார்.
இதனைத் தொடர்ந்து பேட்டி அளித்த பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி நாளை நடைபெற உள்ள மாநாடு வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் , தமிழகத்தில் ஊழல் நிறைந்த ஆட்சிக்கு எதிராக பாஜக செயல்பட்டு வருகிறது. இதனால் ஊழல் நிறைந்த திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு இது வெறுப்பை ஏற்படுத்தும் என பேட்டியளித்தார்.