மத்திய மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் !!

மத்திய மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் !!

வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ

சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 27-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு, சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள கலைஞர் மாளிகையில் நடைபெறுகிறது.

சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 27-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு, சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள கலைஞர் மாளிகையில் நடைபெறுகிறது. இதற்கு அவைத்தலைவர் சுபாசு தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் மத்திய மாவட்டம் மற்றும் மாநகர நிர்வாகிகள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, பகுதி, பேரூர் நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள், கோட்ட செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்ள வேண்டும். மேலும் இளைஞர் அணி, வக்கீல் அணி, விவசாய அணி, விவசாய தொழிலாளர் அணி, மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி, தகவல் தொழில் நுட்ப அணி, வர்த்தக அணி, சிறுபான்மையினர் அணி, நெசவாளர் அணி, அயலக அணி, தொண்டர் அணி, சுற்றுச்சூழல் அணி, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி, தொழிலாளர் அணி, மீனவர் அணி, ஆதிதிராவிடர் நலக்குழு உள்ளிட்ட சார்பு அணியினர் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Tags

Next Story