தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சிக்கிறது-திமுக வேட்பாளர்

தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சிக்கிறது-திமுக வேட்பாளர்

கடந்த 10 வருடமாக மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது என திமுக வேட்பாளர் அருண்நேரு திருச்சி பிரச்சாரத்தில் பேசினார்.


கடந்த 10 வருடமாக மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது என திமுக வேட்பாளர் அருண்நேரு திருச்சி பிரச்சாரத்தில் பேசினார்.

அப்போது கடந்த10 வருடமாக எல்லா விசயத்திலும் தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சிக்கிறது என பேசினார். திமுக மற்றும் தோழமை கட்சி சார்பில் பெரம்பலூர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண்நேரு தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வாக்குகளை சேகரித்து வருகிறார்.இன்று குணசீலத்தில் தேர்தல் பரப்புரையை தொடங்கி வாக்காளர்களிடம் பேசிய திமுக வேட்பாளர் அருண்நேரு உங்களுக்கு வந்த முதல்வரால் பல நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக மகளிர் உரிமைத் தொகை திட்டம்.100 வேலை திட்டம் 6 மாதத்திற்கு முன்பு நிறுத்தப்பட்டது.வடக்கே உள்ள தேர்தலில் அவர்களுக்கு வேண்டுமென்று நம்ம நிதியை அவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். நீங்கள் பயன்படுத்தும் பெட்ரோல்,டீசல்,அரிசி உள்ளிட்டவைகளுக்கு வரியை எடுத்துக் கொள்கிளார்கள்.நமாக நமக்கு வரவேண்டிய வரியை கொடுப்பதில்லை.

நாம 1 ஒரு ரூபாய் வரி கட்டினால் 29 பைசாதான் தருகிறார்கள்.பாஜக ஆளும் மாநிலங்களில் ஒரு ரூபாய்க்கு 2 ரூபாய் 12 பைசா தருகிறார்கள். நம்மளைவிட 10 மடங்கு தருகிறார்கள்.10 வருடமாக எல்லா விசயத்திலும் தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சிக்கிறது.தமிழக மாணவர்களுக்கு மருத்துவ சீட்டை அதிகரிக்க 6 மருத்துவ கல்லூரிக்கு முதல்வர் அனுமதி கேட்டதற்கு மறுக்கப்பட்டுள்ளது.ஆகவே இந்த குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்க உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்குமாறு பேசி வாக்கு சேகரித்தார். இந்த தேர்தல் பரப்புரையில் திமுக,மதிமுக,விசிக,காட்கிரஸ் உள ளிட்ட தோழமை கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story