மாநில அரசை வஞ்சிக்கும் மத்திய அரசு - திமுகவினர் பிரச்சாரம்
ஒன்றிய அரசு தமிழகத்தை எப்படி வஞ்சிக்கிறது, என்பது குறித்து, பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த திமுக துணை பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, மத்திய அரசு மாநில அரசுகளிடமிருந்து ஜிஎஸ்டி வரியை பெற்றுக் கொண்டு, மீண்டும் எவ்வளவு கொடுக்கிறது என்பது குறித்து, விளக்கும் வகையில் புள்ளி விபர , படத்துடன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதில் ஜிஎஸ்டி மற்றும் நேரடி வரி மூலம் ஒவ்வொரு மாநிலமும் செலுத்தியதொகை மற்றும் மத்திய அரசு திருப்பி அளித்த தொகை குறித்து ஒரு ரூபாய் அடிப்படையில்புள்ளிவிவரத்தை பதிவிட்டுள்ளார்.
அதன்படி, அனைத்து மாநிலங்களிடம் இருந்து ஒரு ரூபாய் மத்திய அரசு வரியாக பெற்றுக் கொண்டால், மீண்டும் திருப்பி செலுத்திய தொகையாக உத்திர பிரதேச மாநிலத்திற்கு, 2 ரூபாய் 2 பைசாவும், மத்திய பிரதேசத்திற்கு ஒரு ரூபாய் 70 பைசாவும், ராஜஸ்தானிற்குஒரு ரூபாய் 14 பைசாவும், கேரள மாநிலத்திற்கு 60 பைசாவும், தெலுங்கானாவிற்கு 40 பைசாவும், தமிழகத்திற்கு 26 பைசாவும், கர்நாடகாவிற்கு 14 பைசாவும், வழங்கி வருகிறது, என்பதை மிக தெளிவாக. புள்ளி விபரங்களுடன், அனைத்துதரப்பு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில்: பதிவிட்டுள்ளார்,
இதனை, கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பொதுமக்கள் பாமர மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மத்திய அரசு மாநில அரசுகளை வஞ்சிப்பது குறித்து, துண்டுபிரசுரங்கள் வாயிலாக. பிப்ரவரி ஒன்பதாம் தேதி பெரம்பலூர் மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில், மாவட்ட மாணவரணி அமைப்பாளர்கள் தங்க கம்மல் தலைமையில், துண்டு பிரசுரம் இயக்கம் மேற்கொண்டனர்.
இதில் குரும்பலூரில் உள்ள அரசு கல்லூரி மற்றும் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், ஆகிய இடங்களில்கல்லூரி மாணவர்கள் பேருந்து பயணிகள், பொதுமக்கள் அனைவரிடமும் மத்திய அரசின் நிலைப்பாட்டை எடுத்துரைத்து துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் ரினோ பாஸ்டின்.. கிருஷ்ணா இளையராஜா அமுல்ராஜ். இராசா முகமத் ஹாலித் உள்ளிட்ட திமுக மாணவர் அணி சேர்ந்த உறுப்பினர்கள் பலர் உடன் இருந்தனர்.