ஆராய்ச்சி மாணவிகளுக்கு மத்திய அரசின் இலவச காப்புரிமை ஒப்பந்தம்

ஆராய்ச்சி மாணவிகளுக்கு மத்திய அரசின் இலவச காப்புரிமை ஒப்பந்தம்

சங்ககிரி விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் டெக்ஸ்டைல் ஃபேஷன் மற்றும் காஸ்டியும் டிசைனிங் ஃபேஷன் துறை மாணவியர் அமைப்பின் சார்பில் மத்திய அரசின் இலவச காப்புரிமை ஒப்பந்தம் நிறைவேறியது. 

ஆராய்ச்சி மாணவிகளுக்கு மத்திய அரசின் இலவச காப்புரிமை ஒப்பந்தம்

சங்ககிரி விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் ஒரு அங்ஙகமான விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் டெக்ஸ்டைல் ஃபேஷன் மற்றும் காஸ்டியும் டிசைனிங் ஃபேஷன் துறை மாணவியர் அமைப்பின் சார்பில் மத்திய அரசின் இந்திய தரநிர்ணய சபையுடன் ஒப்பந்தம் நிறைவேறியது. இந்திய தரநிர்ணய சபை ஒப்பந்த துவக்க விழாவிற்கு விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் மற்றம் மருத்துவமனகைளின் தாளாளர் மற்றும் செயலர் பேராசிரியர் டாக்டர் மு.கருணாநிதி தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் கிருஷ்ணவேணி கருணாநிதி, இணை நிர்வாக இயக்குநர் டாக்டர் அர்த்தநாரீஸ்வரன், இணைச் செயலாளர் டாக்டர் ஸ்ரீராகநிதி அர்த்தநாரீஸ்வரன், வைஸ்சேர்மன் டாக்டர் கிருபாநி திகருணாநிதி, இயக்குநர் டாக்டர் நிவேதனா கிருபாநிதி, செயல் இயக்குநர் டாக்டர் குப்புசாமி, தலைமை செயல் அதிகாரிகள் பேராசிரியர் சொக்கலிங்கம், பேராசிரியர்வரதராஜீ, திறன் மேம்பாட்டுத்துறை இயக்குநர் டாக்டர் குமரவேல், டெக்ஸ்டைல் ஃபேஷன் மற்றும் காஸ்டியும் டிசைனிங் ஃபேஷன் துறைகளின் டீன் பேராசிரியர் டாக்டர் சி.கே. இரவிசங்கர், ஐ.க்யூ.சி இயக்குநர் டாக்டர் சுரேஷ்குமார், அட்மிஷன் அதிகாரி பேராசிரியர் தழிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக இந்திய தரநிர்ணய சபையின் சேலம் மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் டூவார்ட்ஸ் தே சேன்ஜ் என்.ஜி.ஓ அமைப்பின் நிறுவனருமான நிர்மல் மற்றும் விவேக் ஆகியோர் கலந்துகொண்டார். நிர்மல் தனது சிறப்புரையில், “இந்திய தர நிர்ணய சபையின் விழிப்புணர்வு போட்டிகளில் பங்கேற்ற வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரூ.2,500 ரொக்கப் பரிசு மத்திய அரசினால் வழங்கப்படுகிறது; மத்திய அரசின் சான்றிதழ்கள் மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் அவர்வகளுக்கு வழிகாட்டும் பேராசிரியர்களுக்கும் வழங்கப்படும். ஆராய்ச்சி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளில் பதிவுக் கட்டணத்தை இந்திய அரசு ஏற்றுக் கொள்ளும்; இதன் மூலம் இந்திய தர நிர்ணயம் பற்றிய அடிப்படை வழிகாட்டுதல்களை மாணவர்கள் புரிந்து கொண்டு தங்கம், வெள்ளி முதல் இரயில்வே துறையினால் வழங்கப்படும் உணவுகள் வரை தர நிர்ணயம் செய்து கொள்ள முடியும்” என்று குறிப்பிட்டார். ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை பி.ஐ.எஸ் பொறுப்பாளர்கள் நிர்மல், விவேக், தலைமை செயல் அதிகாரி பேராசிரியர் வரதராஜீ, டெக்ஸ்டைல் ஃபேஷன் மற்றும் காஸ்டியும் டிசைனிங் ஃபேஷன் துறைகளின் டீன் பேராசிரியர் டாக்டர் சி.கே. இரவிசங்கர், ஐ.க்யூ.சி இயக்குநர் டாக்டர் சுரேஷ்குமார் வழங்கினர்.

Tags

Next Story