சந்தி சிரிக்கின்ற ‘போலி திராவிட மாடல்’ அரசு..! - எல் முருகன் அறிக்கை
எல்.முருகன்
பாமர மக்களுக்கு தேவைப்படுகிற அடிப்படை வசதியை கூட ஏற்படுத்திக் கொடுக்க முடியாத போலி சமூக நீதி அரசாங்கத்தை தான், நாட்டின் முதன்மை ஆட்சி என்று கூறிக் கொள்கிறீர்களா என முதல்வருக்கு எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்
மத்திய இணை அமைச்சர் எல் முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் அன்றாடம் தங்களுடைய குடும்பத்தை காக்க அயராது உழைக்கும் பாமர மக்களுக்கு, அரசு மருத்துவமனைகளே தெய்வங்களாக இருந்து வருகின்றன. அப்படி இருக்கையில், இப்படியாக பாமர மக்களுக்கு தேவைப்படுகிற அடிப்படை வசதியை கூட ஏற்படுத்திக் கொடுக்க முடியாத ‘போலி சமூக நீதி’ அரசாங்கத்தை தான், நாட்டின் முதன்மை ஆட்சி என்று கூறிக் கொள்கிறீர்களா, முதல்வர் ஸ்டாலின் அவர்களே..? என்று கேள்வி எழுப்பியுள்ளார்
Next Story