அரசு மருத்துவமனையில் மூளை ரத்தநாள அறுவை சிகிச்சை

அரசு மருத்துவமனையில் மூளை ரத்தநாள அறுவை சிகிச்சை

மூளை ரத்தநாள அறுவை சிகிச்சை

அரசு மருத்துவமனையில் மூளை ரத்தநாள அறுவை சிகிச்சை - மருத்துவக்குழுவுக்கு பாராட்டு.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த வல்லம் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(வயது 36). பொக்லைன் எந்திர ஆபரேட்டரான இவர், கடந்த 5-ந் தேதி திடீரென மயங்கி விழுந்து சுயநினைவின்றி விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு மூளையின் வலது பக்கத் தில் ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டு, வெடித்து ரத்தக்கசிவு இருந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கடந்த 13-ந் தேதி கல்லூரி முதல்வர் ரமாதேவி ஆலோசனையின் பேரில் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் பல்லவன் தலைமையில் டாக்டர்கள் சந்தோஷ், ராஜ், கவுதம், ஆனந்த், மயக்கவியல் துறை தலைவர் அருண் சுந்தர், டாக்டர்கள் திருச்செல்வம், மகேந்திரன், தேவசேனா, செவிலியர்கள் செல்லம்மாள், பச்சையப்பன் ஆகியோர் கொண்ட குழுவி னர் 6 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து ரத்தநாள அடைப்பை சரி செய்தனர்.

இதேபோல் அகரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஜெயக்குமாருக்கு கடந்த 20-ந் தேதி வைக்கோல் கட்டு விழுந்ததில் கழுத்து எலும்பு முறிந்தது. உடனடியாக அவருக்கு மருத்துவ குழுவினர் கோயல் அறுவை சிகிச்சை முறையில் சிகிச்சைசெய்து கழுத்து எலும்பில் ஸ்குரு மற்றும் பிளேட் பொருத்தப்பட்டது. இதேபோல் பண்ருட்டி அடுத்த அங்கு செட்டிப்பாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளி கார்த்திகேயன் (25) என்பவரது கழுத்தில் கடந்த 3 ஆண்டாக தேங்காய் அளவிற்கு கட்டி வளர்ந்து இருந்தது. இதுவும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

இது போன்ற சிக்கலான அறுவை சிகிச்சைகள் சென்னை, மதுரை போன்ற பெரு நகரங்களில் மட்டுமே செய்யப்படுகிறது. தற்போது முதன்முறையாக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் செய்யப்பட்டுள்ளது. இந்த மாதிரியான அறுவை சிகிச்சைகள் தனியார் மருத்துவமனைகளில் செய்தால் லட்சக்கணக்கான ரூபாய் செலவாகும். இந்த சவாலான அறுவை சிகிச்சைகளை செய்த மருத்துவ குழுவை கல்லூரி டீன் ரமாதேவி பாராட்டினார். அப்போது நிலைய மருத்துவ அலுவலர் ரவிக்குமார், உதவி நிலைய மருத்துவ அலுவலர், வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story