ரோபாடிக்ஸ் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் 

ரோபாடிக்ஸ் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் 
மாணவர்களுக்கு பயிற்சி சான்றிதழ் 
தஞ்சாவூர் அருகே பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் ரோபோடிக்ஸ் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது
தஞ்சாவூர் அருகே வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் ரோபோட்டிக் பயிற்சி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வெ.ராமச்சந்திரன் தலைமை வகித்து பேசினார். அவர் பேசுகையில், "ரோபோடிக்ஸ் தொழில்துறையில் இந்தியா முன்னேறி இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, அறிவியல் நாள் கண்காட்சி, பல்கலைக்கழகத்தில் மாணவர்களால் காட்சிப்படுத்தப்பட்டது. அதில், பங்கேற்ற மாணவர்கள் தங்கள் அறிவியல் திறனை வெவ்வேறு வகையில் வெளிப்படுத்தி இருந்தனர். பெற்றோர்களாகிய நீங்கள், உங்களுடைய பிள்ளைகளை எந்த துறையில் பயில வேண்டும் என விரும்புகிறார்களோ அந்த துறையில் பயில வைக்க வேண்டும்" என்றார். தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், பல்கலைக்கழக பதிவாளர் பி.கே.ஸ்ரீவித்யா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். தொடர்ந்து, திருச்சி, வெட்டிக்காடு, ஜெயங்கொண்டம் ஆகிய ஊர்களில் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு ஒரு வருடமாக, பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் ரோபோடிக்ஸ் துறை பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி முடித்த 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயின்ற 917 பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கப்பட்டது. முன்னதாக கணினி மற்றும் அறிவியல் துறை முதன்மையர் ஷர்மிளா பேகம் வரவேற்றார். நிறைவாக ரோபோடிக்ஸ் பயிற்சியாளர் திவ்யா நன்றி கூறினார்.

Tags

Next Story