மாணவர்களுக்கு சான்றிதழ் : இ-சேவை மையங்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்!

மாணவர்களுக்கு சான்றிதழ் : இ-சேவை மையங்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்!

ஆட்சியர் லட்சுமிபதி 

தூத்துக்குடி மாவட்டத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய அனைத்து மாணவ மாணவியர்களுக்கு உயர்கல்வி பயில உடனுக்குடன் சான்றுகள் வழங்க அனைத்து இ-சேவை மையங்களுக்கும் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி அறிவுறுத்தியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய மாணவ மாணவியர்களை உயர்கல்விக்கு ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தூத்துக்குடி மாணிக்கம் மஹால் மற்றும் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூhயில் 11.05.2024 அன்று மாபெரும் ‘கல்லூரி கனவு”- உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய அனைத்து மாணவ/மாணவியர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர். மேற்படி கல்லூரி கனவு நிகழ்ச்சியின் போது மாணவ மாணவியர்களுக்கு அனைத்து வகையான இணையவழி சான்றுகளும் வழங்க வருவாய் துறை மூலம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அங்கு விண்ணப்பித்தவர்களுக்கு அனைத்து சான்றுகளும் உடனுக்குடன் வழங்கப்பட்டது.

மேலும் உயர்கல்வியில் சேர தேவைப்படும் அனைத்து இணையவழி சான்றுகளும் தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர், அனைத்து கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்கள் உட்பட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டுவரும் 1312 இ-சேவை மையங்கள் மூலமாக உடனுக்குடன் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story