அதிமுக சார்பாக திமுக அரசை கண்டித்து வடிவ சங்கிலி போராட்டம்

வடிவ சங்கிலி போராட்டம்
அதிமுக சார்பாக திமுக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் தலைமையில் வடிவ சங்கிலி போராட்டம் நடைபெற்றது
விருதுநகரில் முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி தலைமையில் போதைப் பொருளை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் - 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்ப்பு . தற்போது திமுக ஆட்சியில் போதைப் பொருள்களின் பயன்பாடு அதிகரித்திருப்பதாகவும் தற்போது தமிழகம் முழுவதும் பரவி உள்ள இந்த போதைப் பொருட்கள் விற்பனையால் பள்ளி, மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் சீரழிந்து வருவதாகவும் திமுக ஆட்சியில் போதைப் பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும், அதை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதனை முன்னிட்டு இன்று விருதுநகரில் அதிமுக நகரக் கழகம் சார்பில் மேற்கு மாவட்ட கழக அமைப்பு செயலாளரும் , முன்னாள் பால் வளத்துறை அமைச்சருமான கே. டி. ராஜேந்திர பாலாஜி தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த மனித சங்கிலி போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு போதைப்பொருள் பழக்கத்தை கட்டுப்படுத்த ஸ்டாலின் அரசே பதவி விலகு, முடிவு கட்டுவோம் கொடுங்கள் ஆட்சிக்கு முடிவு , அழிவின் பாதை போதை அதை தரும் திமுக ஏன் தேவை, ஊழல் செய்யும் ஸ்டாலின் குடும்ப ஆட்சி தேவையில்லை, மாஃபியாவோடு தொடர்பில் உள்ள ஆளும் திமுக வை கண்டிக்கின்றோம், விடியா திமுக வே மாணவர்களின் வாழ்க்கையை அழிக்காதே உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகை களை கையில் ஏந்தியபடி இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.
இந்த பேரணியானது விருதுநகர் தேசபந்து மைதானத்தில் தொடங்கி, மூளிப்பட்ட அரண்மனை சந்திப்பு, பாவாலி ரோடு, கல்பள்ளி வாசல் வரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் கை கோர்த்து நின்று மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்


