தலைமை ஆசிரியையிடம் நகை பறிப்பு - தந்தை, மகன் கைது

தலைமை ஆசிரியையிடம் நகை பறிப்பு -  தந்தை, மகன் கைது

கைது செய்யப்பட்டவர்களுடன் காவல்துறையினர் 

நாகர்கோவில் அருகே தலைமை ஆசிரியையிடம் நகை பறித்த வழக்கில் தந்தை மற்றும் மகனை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து நகையை மீட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தொழிக்கோடு, புதுவிளை பகுதியை சேர்ந்தவர் ஜெராபின் பிளவர் குயின் (55). இவர் வடிவீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியையாகக உள்ளார். சம்பவ தினம் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக மீனாட்சிபுரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த ஒருவர் ஜெராபின் பிளவர் குயின் கழுத்தில் கிடந்த ஐந்து பவுன் செயினை பறித்து சென்றார். இது குறித்து அவர் கோட்டார் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் கைப்பற்றி அதில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும் கோட்டாறு இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் விசாரணையில் தலைமை ஆசிரியையிடம் குடுந்தன்கோடு அருகே உள்ள கொடுப்பை குழியை சேர்ந்த சிவ சங்கு அவரது மகன் சிவா ஆகியோர் சேர்ந்து நகையை பறித்தது தெரியவந்தது.

இதை அடுத்து இருவரையும் போலீசார் நேற்று இரவு கைது செய்தனர் அவர்களிடம் இருந்து நகை மீட்கப்பட்டது. தொடர்ந்து அவரிடம் போலீஸ் நடத்தை விசாரணையில் வடசேரியில் ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் ராமநாதன் வீட்டிலும் ராஜாக்கமங்கலத்தில் வீட்டில் இவர்கள் திருடி இருப்பது தெரிய வந்தது. இவர்கள் திருடிய டிவி, குத்துவிளக்குகள் உள்ளிட்ட பொருட்களும் பறிருத்தல் செய்யப்பட்டன.

Tags

Next Story