செயின் பறிப்பு - 2 பெண்களுக்கு சிறை
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அடுத்த கோட்டவிளை பகுதியை சேர்ந்தவர் ஆன்டின் ஸ்டெல்லா மேரி. இவர் கடந்த 18-12-2023 அன்று கருங்கல் பேருந்து நிலையத்திலிருந்து பூட்டேற்றி செல்லும் தடம் எண் 87 H அரசு பேருந்தில் செல்லும் போது, அவர் முன்னால் அமர்ந்திருந்த சேலம் பகுதியை சேர்ந்தமணி என்பவரது மனைவிகள் சிவரஞ்சனி (வயது 28), முத்துமாரி ( வயது 27) ஆகியோர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
பஸ் கோட்டவிளை பஸ்டாப்பில் வரும்போது ஆன்டின் ஸ்டெல்லா மேரி இறங்கியுள்ளார். அப்போது முன்னால் இருந்த சிவரஞ்சனி ஆன்டின் ஸ்டெல்லா மேரியின் காலை தட்டிவிட்டு விட்டு சிவரஞ்சனி வைத்திருந்த துப்பட்டாவால் ஆன்டின் ஸ்டெல்லா மேரியின் முகத்தில் போட்டு அவர் அணிந்திருந்த 5 1/2 பவுன் தங்க சங்கிலியை பறித்து தப்பி சென்றார்.
பின் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அவருடன் வந்த முத்துமாரியையும் தப்பி சென்ற சிவரஞ்சனியையும் துரத்தி சென்று பிடித்தனார். பின் இச் சம்பவம் குறித்து கருங்கல்காவல்நிலையத்திற்க்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கு இரணியல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று இரணியல் நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.அமீர்தீன் சிவரஞ்சனி மற்றும் முத்துமாரி இருவருக்கும் 3 ஆண்டு மெய்க்காவல் தண்டனை வழங்கி தீர்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ரேவதி வாதாடினார். தண்டணை பெற்ற இருவரும் மதுரை பெண்கள் சிறைச்சாலைக்கு கொண்டு சென்று சிறையில் அடைத்தனர்.