பெண்ணிடம் சங்கிலி பறிப்பு, காட்டிக்கொடுத்த சிசிடிவி - கைது செய்த போலீசார்

கூடலூரில் பெண்ணின் கழுத்தில் இருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற நபரை சிசிடிவி பதிவுகளை கொண்டு கணடறிந்து போலீசார் கைது செய்தனர்.
கூடலூரில் கடந்த 8- ம் தேதி கூடலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போலீஸ் மட்டம் என்ற இடத்தில் பாட்டவயல் பகுதியை சேர்ந்த ஒரு பெண் தனது உறவினர்களை சந்திக்க தனியாக வந்து கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத ஒரு நபர் தனது இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து கொண்டு பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி விட்டு அவரது கழுத்தில் இருந்த தங்க நகையை பறித்து சென்றுள்ளார். இது சம்பந்தமாக கிடைக்கப்பெற்ற புகாரின் பேரில் தனிப்படை அமைத்து கூடலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு அடையாளம் தெரியாத நபரை தேடி வந்தனர். தொடர்ந்து CCTV காட்சிகளை ஆய்வு செய்து மைசூரை சேர்ந்த ஷாகுநல்லா என்ற குற்றவாளி கைது செய்துள்ளனர். மேலும் பெண்ணின் கழுத்தில் இருந்து பறித்து சென்ற தங்க நகை மற்றும் இரு சக்கர வாகனம் ஆகியவற்றை தனிப்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Tags

Next Story