மூத்த குடிமக்கள் வாக்களிக்க நாற்காலி சேவை: மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் வயது மூத்த குடிமக்கள் நலனுக்காக மற்றும் மாவட்ட சிறந்த முறையில் வாக்களிப்பதை கண்காணிக்க அமைக்கப்பட்ட மாவட்ட குழு (District Monitoring Committee on Accessible Elections) பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி மாற்றுதிறனாளி மற்றும் மூத்த குடிமக்கள் நலனுக்காக அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் சக்கர நாற்காலி வழங்குவது தொடர்பாக பல்வேறு துறைகளிடம் உள்ள சக்கர நாற்காலிகள் வழங்கிட, மாவட்ட மாற்று திறனாளி நல அலுவலர் அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும், உதவி இயக்குநர், ஊராட்சி மற்றும், இணை இயக்குநர் மற்றும் துணை இயக்குநர், சுகாதார பணிகள் ஆகியோர்களுக்கு தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளிடம் உள்ள சக்கர நாற்காலிகளை பெற அறிவுரை வழங்கினார். மேலும், நாடாளுமன்ற பொதுத் தேர்தலின் போது சிறந்து முறையில் நாற்காலிகளை பயன்படுத்தி, இச்சேவையை சிறப்பாக செயல்படுத்திடவும் அறிவுரை நல்கப்பட்டது.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், உதவி தேர்தல் அலுவலர் / தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் ம.பிரபு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், தூத்துக்குடி சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் பொற்செல்வன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உலகநாதன், மாவட்ட சமூக நல அலுவலர் பிரேமலதா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
