சிங்கம்புணரி ஒன்றிய கூட்டத்திலிருந்து தலைவர்,கவுன்சிலர்கள் வெளிநடப்பு

சிங்கம்புணரி ஒன்றிய கூட்டத்திலிருந்து தலைவர்,கவுன்சிலர்கள் வெளிநடப்பு

வெளிநடப்பு 

சிவகங்கை அருகே கோட்டை வேங்கப்பட்டியில் 2010 - 11 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சமத்துவபுரம் ஆட்சி மாற்றத்தால் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் அந்த சமத்துவபுரம் சீரமைக்கப்பட்டு கடந்த ஆண்டு ஜூனில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதற்காக சிங்கம்புணரி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூபாய் 1.76 கோடி செலவழிக்கப்பட்டது. அந்த தொகையை வேறு வகையில் ஒன்றியத்துக்கு ஒதுக்கீடு செய்வதாக அப்போது அதிகாரிகள் தரப்பில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஓராண்டு கடந்தும் இதுவரை பணத்தை திருப்பி தரவில்லை என்றும், மேலும் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு ஒன்றியத்துக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் கூறி ஒன்றிய தலைவர் திவ்யா (அதிமுக) தலைமையில் அனைத்து கட்சி கவுன்சிலர்கள் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்திடம் புகார் மனு அளித்தனர். அதன்பின்பும் நிதி ஒதுக்கப்படவில்லை. இதையடுத்து சிங்கம்புணரி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறவிருந்த ஒன்றிய கூட்டத்திற்கு வந்த தலைவர், கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Tags

Next Story