சக்கத்தா மாரியம்மன் தேர் திருவிழா!
கோத்தகிரி அருகே உள்ள அரவேணு சக்கத்தா மாரியம்மன் கோவில் தேரோட்ட நிகழ்ச்சி நடந்தது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, அரவேணு சக்கத்தா கிராமத்தில் பழமையான மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும், ஒரு வாரம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. திருவிழாவின் கடைசி நாளான இன்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீற்றிருந்து சக்கத்தா கிராமத்தில் இருந்து பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க அரவேணு பஜார் உள்பட நகரின் முக்கிய வீதிகள் வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள கோவிலை சென்றடைந்தது. இதில் ஏராளமான படுகரின மக்கள் கலந்து கொண்டு நடனமாடி தேரை இழுத்து வழிபட்டனர்.
Next Story