காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் மூன்றாவது முறையாக வாய்ப்பு !

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் மூன்றாவது முறையாக வாய்ப்பு !

திமுக சார்பில் தொடர்ந்து மூன்றாவது முறையாக காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளராக செல்வத்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

திமுக சார்பில் தொடர்ந்து மூன்றாவது முறையாக காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளராக செல்வத்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஜி.செல்வம் வழக்கறிஞராகவும், விவசாயியாகவும் உள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் காஞ்சிபுரம் தொகுதியில் எம்.காம். எம்.பில், எல்.எல்.பி படித்த ஜி. செல்வம்(50) போட்டியிடுகிறார். வழக்கறிஞராக இருக்கும் அவர் ஒரு விவசாயியும் கூட உள்ளார். 1996ம் ஆண்டில் வாலாஜாபாத் ஒன்றிய முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டார். 1997ம் ஆண்டு நடந்த கூட்டுறவு சங்க தேர்தலில் போட்டியிட்டு கூட்டுறவு ஊரக வளர்ச்சி வங்கியின் துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

2008ம் ஆண்டு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளராக இருந்தார். இதையடுத்து 2012ம் ஆண்டு மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளராக உள்ளார். தற்போது காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட துணை செயலாளராக உள்ளனர். முன்னதாக 2008ம் ஆண்டு திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்த திருமண விழாவில் சகீலா என்பவரை மணந்தார். அவர்களுக்கு ஆராதனா, சுருதி என்ற 2 மகள்கள் உள்ளனர். செல்வம் தனது தந்தை கணேசனை போன்றே இளம் வயதில் இருந்து திமுகவில் அரசியல் பணிகள் செய்து வருகிறார்.

இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் முறையாக காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு போட்டியிட்டு இவரை எதிர்த்த போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மரகத குமரவேலிடம் தோல்வியிட்டார், இதன்பிறகு அடுத்து நடைபெற்ற 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதிமுக இரண்டு வேட்பாளர்களும் மீண்டும் களம் இறக்கி களம் கண்டதில் 2 லட்சத்து 36 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் செல்வம் வெற்றி பெற்றார்.

இதனைத் தொடர்ந்து தற்பொழுதும் தொடர்ந்து மூன்றாவது முறையாக திமுக சார்பில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் ஜி.செல்வம் வேட்பாளராக திமுக அறிவித்துள்ளது.

Tags

Next Story