தமிழகத்தில் ஜூன் 1, 2 மற்றும் 3ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு!
மழை (பைல் படம்)
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் நாளை முதல் 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது .
தமிழ்நாட்டில் ஜுன் 1,2,3-ம் தேதிகளில் ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஜூன் 1,2 ஆகிய தேதிகளிலும், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில், ஜூன் 3ஆம் தேதி திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. தென்மேற்கு பருவமழை கேரளாவில் பெரும்பாலான பகுதிகளிலும், தென்தமிழத்தில் சில பகுதிகளிலும் நேற்று தொடங்கியது என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story