மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி எடுத்து வருகிறது. பகல் நேரங்களில் வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது.மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் வியர்வை மழையில் நனைந்தபடியே கொளுத்தும் வெயிலில் பயணம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாநகர் உட்பட மாவட்டம் முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. பகல் நேரங்களில் அனல் காற்று வீசுகிறது. இரவு நேரத்திலும் புழுக்கம் அதிகரித்து அனல் காற்றே வீசுகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

Tags

Read MoreRead Less
Next Story