பொய்யாதநல்லூர் ப்ரத்தியங்கரா தேவி திருக்கோவிலில் சண்டியாகம்

பொய்யாதநல்லூர் ப்ரத்தியங்கரா தேவி திருக்கோவிலில் சண்டியாகம்

அரியலூர் மாவட்டம் பொய்யாதநல்லூர் கிராமத்தில் தை மாத மஹாளய அமாவாசையை முன்னிட்டு ப்ரத்தியங்கரா தேவி திருக்கோவிலில் சண்டியாகம் நடந்தது.

அரியலூர் மாவட்டம் பொய்யாதநல்லூர் கிராமத்தில் தை மாத மஹாளய அமாவாசையை முன்னிட்டு ப்ரத்தியங்கரா தேவி திருக்கோவிலில் சண்டியாகம் நடந்தது.
அரியலூர் மாவட்டம் பொய்யாதநல்லூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ப்ரத்தியங்கரா தேவி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் மிகவும் விஷேசமான தை மாத மஹாளய அமாவாசையை முன்னிட்டு இன்று பிரம்மாண்டமான சண்டியாக பூஜை நடைப்பெற்றது. இதில் மூட்டை மூட்டையாக மிளகாய், மற்றும் மா, பலா, வாழை, மஞ்சள், குங்குமம், ஜாதிகாய், ஜாதிபத்திரி, கருமிளகு, வசம்பு, திப்பிலி, முந்திரி, கடுக்காய், வெட்டிவேர் உள்ளிடவைகளை யாகத்தில் இட்டு பக்தர்கள் தங்களது நேர்த்திகடனை செலுத்தினர். பின்னர் ப்ரத்தியங்கரா தேவிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து ஆராதனை காட்டபட்டது. இதில் அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story