தங்க சூரிய பிரபை வாகனத்தில் வலம் வந்து காட்சி தந்த சந்திரசேகரர்
தங்க சூரிய பிரபை வாகனத்தில் சந்திரசேகரர் பவனி
திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், இரண்டாம் நாளான நேற்று காலை திருக்கோவிலில் விநாயகருக்கும், சந்திரசேகரருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து விநாயகருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. அதேபோல் சந்திரசேகரருக்கு வெண்பட்டு உடுத்தி, கற்கள் பதித்த ஆபரணங்கள் சூட்டி, வண்ண வண்ண மலர்களைக் கொண்டு மலர் மாலைகள் சூட்டப்பட்டு, பஞ்ச கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விநாயகரும், சந்திரசேகரரும் திருக்கோவிலை வலம் வந்து ராஜகோபுரம் அருகே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அதன் பின்னர் 4 குடைகள் கூடிய தங்க சூரிய பிரபை வாகனத்தில் சந்திரசேகரரும், மூஷிக வாகனத்தில் விநாயகரும் மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.வழிநெடுகிலும் திரண்டிருந்த பக்தர்கள் மாடவீதியில் வலம் வந்த விநாயகர் மற்றும் சந்திரசேகரை தரிசனம் செய்தனர்.
Next Story