சந்திரசூடேஷ்வரர் மரகதாம்பிகை திருக்கோயில் தேர்திருவிழா

சந்திரசூடேஷ்வரர் மரகதாம்பிகை திருக்கோயில் தேர்திருவிழா

ஒசூரில் பிரசித்தி பெற்ற சந்திரசூடேஷ்வரர் மரகதாம்பிகை உடனுரை கோயில் தேர்திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர்.


ஒசூரில் பிரசித்தி பெற்ற சந்திரசூடேஷ்வரர் மரகதாம்பிகை உடனுரை கோயில் தேர்திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர்.

ஒசூரில் பிரசித்தி பெற்ற சந்திரசூடேஷ்வரர் மரகதாம்பிகை உடனுரை கோயில் தேர்திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த மரகதாம்பிகை உடனுரை சந்திரசூடேஷ்வரர் தேர்திருவிழா இன்று நடைபெற்றது. ஒசூர் சார் ஆட்சியர் செல்வி பிரியங்கா, மாநகர ஆணையாளர் சினேகா, ஒசூர் எம்எல்ஏ பிரகாஷ், மாநகர மேயர் சத்யா ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். ஆண்டுதோறும் மாசி மாதம் நடைப்பெறும் ஒசூர் மலைக்கோவில் திருவிழாவில் தமிழகம்,கர்நாடகா ஆந்திரா ஆகிய அண்டை மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.ஒசூர் மலைக்கோவில் என்றழைக்கப்படும் மரகதாம்பிகை உடனுரை சந்திரசூடேஷ்வரர் திருக்கோயில் தேர்திருவிழா மார்ச் மாத முதல் வாரத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதனையடுத்து ஒவ்வொரு நாளும் சந்திரசூடேஷ்வரர் மற்றும் மரகதாம்பிகை அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் இன்று திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. மரகதாம்பிகை அம்மன் ஒரு தேரிலும்,சந்திர சூடேஸ்வரர் ஒரு தேர் மற்றும் விநாயகர் ஒரு தேர் என மூன்று தேர்களில் அலங்கரிக்கப்பட்ட தெய்வங்கள் பக்தர்களுக்கு காட்சியளித்தன இந்த தேர் திருவிழாவினை ஒட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அரோகரா என விண்ணை பிளக்கும் அளவிற்கு கோஷம் எழுப்பியவாறு பக்தர்கள் தேரை இழுத்தனர்.தேரானது நான்கு முக்கிய வீதிகளில் சுற்றி வலம் வந்தது. தேர்திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் உப்பு, பழம், மிளகு போன்றவற்றை சாமியின் மீது எரிந்து தங்களது நேர்த்திகடனை செலுத்தினர். திருவிழாவை முன்னிட்டு ஓசூர் நகரம் முழுவதும் அன்னதானம், மோர்,பழ ரசங்கள் உள்ளிட்டவை பொதுமக்களுக்கு வழங்கினர். ஓசூர் தேர்திருவிழாவிற்காக 4 வட்டங்களில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளதாலும் ஓசூர் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.ஓசூர் கோவில் திருவிழாவில் அசாம்பாவிதங்களை தவிர்க்க கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி தங்கதுரை அவர்களின் தலைமையில் மாவட்டத்திலுள்ள பல்வேறு காவல்நிலையங்களை சேர்ந்த போலிசார்,ஊர்க்காவல் படையினர் என 500க்கும் அதிகமான போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்...

Tags

Next Story