முதல்வர் வருகையை முன்னிட்டு போக்குவரத்தில் மாற்றம்

தர்மபுரி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் விழா நடப்பதை முன்னிட்டு, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இன்று தர்மபுரி அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள அரசு விழாவில் தர்மபுரி உட்பட மூன்று மாவட்ட திட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது இதனை முன்னிட்டு தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒட்டப்பட்டி முதல் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தர்மபுரி நகரப் பகுதி முழுவதும் விழா கோலம் கொண்டுள்ளது சாலைகளின் இரு ஓரங்களிலும் திமுக கட்சி கொடிகள் நடவு செய்து தோரணங்கள் தொங்கு விடப்பட்டுள்ளன மேலும் வாகனங்கள் நிறுத்த நான்கு கிலோமீட்டர் அப்பால் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதால் பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் மற்றும் திமுகவினர் சாலைகளின் இருபுறங்களிலும் நடந்தே அரசு விழா நடைபெறும் மைதானத்திற்கு செல்கின்றனர் மேலும் காவல்துறையினர் பலத்த கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story