ஊராட்சி பேரூராட்சியாக மாற்றம் - கண்டன ஆர்ப்பாட்டம்

ஊராட்சி பேரூராட்சியாக மாற்றம் - கண்டன ஆர்ப்பாட்டம்
பைங்குளத்தில் ஆர்ப்பாட்டம்.
புதுக்கடை அருகே பைங்குளம் ஊராட்சியை பேரூராட்சியாக மாற்றம் செய்வதை கண்டித்து ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 25 ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைக்கும் நடவடிக்கையும், சில ஊராட்சிகளை பேரூராட்சிகளாகவும் மாற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் புதுக்கடை அருகேயுள்ள பைங்குளம் முதல் நிலை ஊராட்சி தமிழகத்தில் பரப்பளவிலும், மக்கள் தொகையிலும் மிகப் பெரிய ஊராட்சி என பெயர் பெற்றதாகும். தற்போது இதை பேரூராட்சியாக மாற்றப் போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரசின் இந்த நடவடிக்கையை கைவிடக் கேட்டு பைங்குளம் ஊராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் விஜய ராணி தலைமை வகித்தார். துணைத் தலைவர் மேரி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் சந்திரகுமார், முஞ்சிறை ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி தலைவர் குமார் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள், 100 நாள் பணியாளர்கள், தூய்மை காவலர்கள் உட்பட கலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story