நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தொழுகை நேரம் மாற்றியமைப்பு
பள்ளப்பட்டியில், நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தொழுகை நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
பள்ளப்பட்டியில், நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தொழுகை நேரம் மாற்றியமைப்பு. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகாவில், உள்ள பள்ளப்பட்டி நகராட்சி பகுதி இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். இங்கு வசிக்கக்கூடிய இஸ்லாமியர்கள், இஸ்லாமிய கட்டுப்பாட்டு விதிமுறைகள் படி செயல்படுவது வழக்கம். பள்ளப்பட்டியில் மட்டும் சுமார் 30க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் உள்ளது. தேர்தலின் போது பொது மக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் இருப்பதற்காக தாருஸ்ஸலாம் மஸ்ஜித் ஜமாத் சார்பில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வழக்கமாக மதியம் 12 :45- மணிக்கு பாங்கு ஓசை எழுப்பப்பட்டு, மதியம் 1:30 மணிக்கு ஜூம் ஆ தொழுகை நடைபெறும். இந்நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் நடைபெறும் நாள் அன்று 12:30 மணிக்கு பங்கு ஓசை எழுப்பப்பட்டு, 12 :40 மணிக்கு ஜூம் ஆ தொழுகை நடைபெறும் என ஜமாத்தார் சார்பில், வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story