மண்டைக்காடு கோவிலில் கழிவறைக்கு கட்டணம்: அதிர்ச்சியில் உறைந்த போலீசார்

மண்டைக்காடு கோவிலில் கழிவறைக்கு கட்டணம்: அதிர்ச்சியில் உறைந்த போலீசார்
மண்டைக்காடு கோவில் கழிப்பறையில் வைக்கப்பட்டுள்ள போர்டு
மண்டைக்காடு கோவிலில் கழிவறைக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக போலீசார் குற்றம் சாட்டி உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில், மாசித் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்த கோவில் விழாவில் கேரளா மாநிலத்தில் இருந்து அதிகளவிலும், மற்றும் தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளம் பேர் வந்து செல்கின்றனர்.

இங்கு தினமும் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு கழிப்பிட வசதிகள் இலவசமாக செய்யப்பட்டு வந்தது . ஆனால் இந்த வருடம் வெவ்வேறு மாவட்டத்திலிருந்து குமரி மாவட்டம் மண்டைக்காடு பாதுகாப்பு பணிக்கு சென்ற போலீசார் அதிர்ச்சியடையும் வகையில்,

அங்கு உள்ள கழிப்பறையில் வைத்துள்ள பேனரில் - காவல்துறை... அரசு அதிகாரிகள்... எல்லோரும்.. கட்டணம் செலுத்த வேண்டும்... என குறிப்பிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்கு செல்வோருக்கு அது ஒன்றுதான் இலவசமாக இருந்தது. அதற்கும் போர்டு வைத்தது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story