சாமிதோப்பு  தலைமைபதியில் தேரோட்டம்

சாமிதோப்பு  தலைமைபதியில் தேரோட்டம்
சாமித்தோப்பில் தேரோட்டம்
சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமி தலைமை பதியில் நடந்த தைதிருவிழா தேரோட்டத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
குமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமி தலைமை பதியில் தைதிருவிழா கடந்த 19 -ம் தேதி தொடங்கி 11 நாட்கள் நடந்தது. திருவிழா நாட்களில் பணிவிடை, உச்சிப்படிப்பு, வாகன பவனி, அன்னதானம், கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெற்று வருகின்றன. நிறைவு நாளான நேற்று அதிகாலையில் நடை திறப்பு, காலை 6 மணிக்கு பணிவிடை போன்றவை நடந்தன. பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடந்தது. இந்த தேரோட்டம் நான்கு ரகவீதிகளையும் சுற்றி செட்டிவிளை, சாஸ்தான் கோவில்விளை, கோட்டையடி புதூர், சோட்டப் பணிக்கன் தேரிவிளை, காமராஜபுரம் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தேரை அந்த பகுதி மக்கள் வாழைத்தார் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை காணிக்கையாக செலுத்தி வழிபாடு செய்தனர். தேர் தலைமை பதியை வந்தடைந்த பின்பு, அய்யா வடக்கு வாசலில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல மாவட்டங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story