மேலூர் அருகே பழமை வாய்ந்த திருமறைநாதர் திருக்கோவில் தேரோட்டம்

மேலூர் அருகே பழமை வாய்ந்த திருமறைநாதர் திருக்கோவில் தேரோட்டம்

தேரோட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

மேலூர் அருகே பழமை வாய்ந்த திருமறைநாதர் - வேதநாயகி அம்பாள் திருக்கோவில் வைகாசி மாத உற்சாவத்தையொட்டி நடைபெற்ற தேரோட்டம்.

மேலூர் அருகே பழமை வாய்ந்த திருமறைநாதர் - வேதநாயகி அம்பாள் திருக்கோவில் வைகாசி மாத உற்சாவத்தையொட்டி நடைபெற்ற தேரோட்டம்: திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு நமசிவாய கோஷத்துடன் திருத்தேரை வடம் பிடித்து நான்கு மாடவீதிகளிலும் இழுத்து வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாசகம் அருளிய மாணிக்கவாசகர் அவதரித்த திருவாதவூரில், ஹரிமர்த்தன பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட மிகப்பழமையான சிவன் ஸ்தலமான திருமறைநாதர் - வேதநாயகி அம்பாள் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும்.

வைகாசி பெருந்திருவிழா கடந்த 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனையொட்டி, கடந்த 16ஆம் தேதி சுவாமி மேலூர் மண்டகப்படிகளில் எழுந்தருலும் "மாங்கொட்டை" நிகழ்ச்சியும், நேற்று திருமறைநாதர் - பிரியாவிடை வேதநாயகி அம்பாள் திருக்கல்யாண வைபோகமும் விமர்சையாக நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து இன்று விழாவின் முக்கிய நிகழ்சியான திருத்தேரோட்டம் நடைபெற்றதையொட்டி, வேதநாயகி அம்பாள் - உடனுறை திருமறைநாதர் உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெரிய திருத்தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து, தீபாராதனை நடைபெற்றதையடுத்து, கூடியிருந்த திரளான பக்தர்கள் பக்தர்கள் சிவாவாத்தியங்கள் மற்றும் மேளதாளம் முழங்க "நமசிவாயா" கோஷத்துடன் திருத்தேரை, திருக்கோயிலைச் சுற்றியுள்ள நான்கு வெளி வீதியில் இழுத்து வந்தனர்.

இதனைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சின்ன தேரில் வேதநாயகி அம்பாள் எழுந்தருளப்பட்டு திருக்கோயில் நான்கு வெளிவீதிகளில் வலம் வந்தார். பழமை வாய்ந்த இந்த சிவாலயத்தில் நடைபெற்ற திருத் தேரோட்டத்தையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சிவனடியார்கள் மற்றும் பொதுமக்களும் கலந்துக் கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

Tags

Next Story