காரங்காடு புனித ஞானபிரகாசியார் ஆலயத்தில் தேர் பவனி
தேர் பவனி
கன்னியாகுமரி மாவட்டம் காரங்காடு புனித ஞான பிரகாசியார் ஆலய திருவிழா கடந்த 14 ஆம் தேதி கொடிஏற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை மாலை திருப்பலி, இரவு பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் போன்றது நடந்தது. எட்டாம் நாள் திருவிழாவான பாதுகாவலர் விழாவில் இரவு சமபந்தி விருந்து நடந்தது. பக்தர்கள் காணிக்கை வழங்கிய அரிசி, காய்கறி, ஆட்டு கிடாக்கறியுடன் நடந்த விழாவில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
ஒன்பதாம் திருநாள் விழா பலி சிறப்பு திருப்பலி இரவு பாதுகாவலரின் சிறப்பு பவனி நடைபெற்றது. பத்தாம் திருவிழாவை நேற்று காலை 8 மணிக்கு குழித்துறை மறை மாவட்ட ஆயர் தலைமையில சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து புனிதரின் திருத்தேர் பவனி நடைபெற்றது. இதில் காரங்காடு மற்றும் கிளை பங்குகளை சேர்ந்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.