பெரிய தேர் பவனி விழா

பெரிய தேர் பவனி விழா

 கீழ்வேளூரை அடுத்த கோகூர் புனித அந்தோனியர் திருத்தல ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான. பெரிய தேர் பவனி விழா நேற்றிரவு நடைபெற்றது.

கீழ்வேளூரை அடுத்த கோகூர் புனித அந்தோனியர் திருத்தல ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான. பெரிய தேர் பவனி விழா நேற்றிரவு நடைபெற்றது.

நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த கோகூர் புனித அந்தோனியர் திருத்தல ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான. பெரிய தேர் பவணி விழா நேற்று நடைபெற்றது. 1837 ஆம் ஆண்டு கோகூர் வெட்டாற்றில் முதியவர் ஒருவர் தூண்டில் போட்டு மீன் பிடித்துள்ளார். அபோது அவர் தூண்டிலை சுற்றி ஒரு சொருபம் வந்துள்ளது.

அதை ஒதுக்கி விட்டு வேறு இடத்தில் தூண்டில் போட அங்கேயும் அந்த சொருபம் சுற்றியுள்ளார். சொருபத்தை மீட்ட முதியவர் வீட்டில் வைத்துள்ளார். அன்று இரவு முதியவர் கனவில் வெற்றாற்றில் கண்டெடுத்த சொருபம் அந்தோனியார் நான் என்றும் எனக்கு ஆலயம் அமைக்க வேண்டும் என்றுள்ளது. முதியவர் கிராமத்தினரிடம் கூறி ஒரு ஓலை கீற்று கொட்டகை அமைத்து வழிபட்டுள்ளனர். இன்றும் ஒர அடி உயரம் உள்ள புனித அந்தோனியர் திருத்தலத்தில் வழிப்பாட்டிற்காக வைக்கப்ப்டடு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

மேலும் திருவிழாவின் போது ஒரு சலவை தொழிலாளி தனது வேண்டுதல் நிறைவேறியதையடுத்து ஆட்டு கறி குழம்பு வைத்து ஆலயத்திற்கு வருபவர்களுக்கு வழங்க காத்திருந்த போது சலவை தொழிலாளர் என்ற எண்ணத்தில் யாரும் சாப்பாட்டை வாங்க வரவில்லை. இதனால் சமைத்த சாப்பாடு அனைத்தையும் குழி தோண்டி புதைத்து விட்டார். மறு வருடம் உணவு சமைக்க அடுப்புக்கு குழி தோண்டியபோது அந்த இடத்தில் கறி குழம்பு சார்ப்பாடு சூடாக கெடாமல் அப்படியே இருந்துள்ளது. இதையடுத்து ஆண்டு தோறும் ஏராளமானவர்கள் திருவிழாவின் போது ஆட்டுக்கறி குழம்பு சாப்பாடு வழங்கி வருகிறனர். இந்த ஆண்டு பெருவிழா கடந்த 4ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து 13, 14ம் தேதி தேர் பவணி நடைபெற்று முக்கிய விழாவான மூன்றாம் நாள் தேர் பவனி நேற்று முந்தினம் இரவு நடைபெற்றது.

திருத்தல பங்குதந்தை தேவசகாயம் புனிதம் செய்த பின்னர் மிக்கில் சமனசு தேர் முன் செல்ல மின் அலங்கார தேர்களில் ஆரோக்கிய மாதா, அந்தோனியர் தேர் பவனி நடைபெற்றது. அப்போது தேருடன் 500க்கும் மேற்பட்டவர்கள் சாம்பராணி தீ சட்டி ஏந்தி சென்றனர். திருவிழாவின் போது ஏராளமான இடங்களில் கறிகுழம்பு சாப்பாடு பரிமாரப்பட்டது. விழாவில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். நேற்று கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை திருத்தல பங்கு தந்தை தேவசகாயம் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.

Tags

Next Story