ஆட்சிஸ்வரர் கோவிலில் தேரோட்ட திருவிழா

ஆட்சிஸ்வரர் கோவிலில் தேரோட்ட திருவிழா
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் அருகே ஆட்சிஸ்வரர் கோவிலில் தேரோட்ட திருவிழா வெகுவிமர்சையாக நடைப்பெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் நகரில் உள்ள ஸ்ரீ ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழாவின் தேரோட்ட விழா இன்று நடைபெற்றது.. செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் நகரில் நால்வரால் பாடல் பெற்ற சைவ திருத்தலமான ஸ்ரீ இளங்கிலி அம்மன் உடனுறை ஸ்ரீ ஆட்சிஸ்வரர் திருக்கோயில் உள்ளது.

இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பிரம்மோற்சவம் விழா நடைபெறும். கடந்த தமிழ் புத்தாண்டு அன்று கொடியேற்றமும், மூன்றாம் நாள் அதிகார நந்தி சேவையும், ஐந்தாம் நாள் திருக்கல்யாண உற்சவம் ஏழாவது நாளான இன்று திருத்தேரோட்டமும் நடைபெற்றது.

மூன்றாம் நாள் அதிகார நந்தி சேவையும் ஐந்தாம் நாள் திருக்கல்யாண உற்சவம் ஏழாவது நாளான இன்று திருத்தேரோட்டமும் நடைபெற்றது.. இன்று காலை 7:00 மணிக்கு தேரில் சுவாமியும் அம்மனும் எழுந்தருளினர்.அதன் பின்னர் சிவசிவ என பக்தர்களின் கோஷம் விண்ணை பிளக்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர் தேர் நான்கு மாத வீதிகளிலும் வலம் வந்தது.

Tags

Next Story