காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோவிலில் தேர் திருவிழா
தேர்த்திருவிழா
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பிரசித்தி பெற்று அருள் பாலித்து வரும் கொப்புடையம்மன் கோவில் செவ்வாய் திருவிழா தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை அம்பாள் புறப்பாடு பக்தி உலா இரவு தீபாரதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் மதுக்குடம் முளைப்பாரி ஊர்வலமாக எடுத்து வந்து தேரை வலம் வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து அர்ச்சனைகள் செய்யப்பட்டு தேரை வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி துவங்கியது. தேர் சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள காட்டம்மன் கோவிலுக்கு சென்று மீண்டும் கொப்புடையம்மன் கோவிலை வந்த அடையும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் திருவிழா காண பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்திருந்தனர்.