சிவராத்திரியை முன்னிட்டு தேர் திருவிழா

ஓலப்பட்டி சென்றாய சுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், சாலமரத்துப்பட்டி - ஓலப்பட்டி சென்றாய சுவாமி திருக்கோயில் மாசி மகா சிவராத்திரி திருத்தேர் திருவிழா நடைபெற்றது

சாலமரத்துப்பட்டியில் பழமையான பூதேவி, சீதேவி சமேத சென்றாயப் பெருமாள் கோவில் மலை மீது அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு சிவராத்திரி அன்று இரவு தேர் மறுநாள் காலையில் பகல் தேர் வெள்ளோட்டம் வருட வருடம் நடைபெறும் இந்த வருடமும் நடைபெற்றது. கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்லகுமார், சட்டமன்ற உறுப்பினர் தமிழ் செல்வம் வடம் பிடித்து தேரை இழுத்து துவக்கி வைத்தனர் ஊத்தங்கரை மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றனர். தேர் மலையை சுற்றி வரும் பொழுது பக்தர்கள் விவசாய நிலங்களில் விளைந்த அவரை துவரை ஆமணக்கு ஆகியவற்றை தேரின் மீது வீசி பக்தர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தேர் வெள்ளோட்டத்திற்கு ஊத்தங்கரை உட்கோட்டை கல்லாவி காவல்துறையினர் சிறப்பான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் ஸ்ரீதேவி பூதேவி சமேத சென்றாய பெருமாள், மலர் மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர

Tags

Next Story