சித்தூர் அந்தோணியார் கோவிலில் தேர் திருவிழா சிறப்பு திருப்பலி

சித்தூர் அந்தோணியார் கோவிலில் தேர் திருவிழா சிறப்பு திருப்பலி

சித்தூர் அந்தோணியார் கோவிலில் தேர் திருவிழா சிறப்பு திருப்பலி

சித்தூர் அந்தோணியார் கோவிலில் தேர் திருவிழா சிறப்பு திருப்பதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

தர்மபுரி மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதி நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட கோவிலூர் பங்கு சித்தூர் கிராமத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித அந்தோனியார் திருத்தலம் அமைந்துள்ளது இக்கோவிலின் தேர்த்திருவிழாவை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை மேதகு ஆயர் லாரன்ஸ் பையஸ் தலைமையில் திருவிழா கொடி ஏற்றப்பட்டது. இன்று ஜூன் 16 அந்தோணியார் திருத்தேர் திருவிழா காலை 11 மணிக்கு பங்குத்தந்தை அருட்திரு ஆரோக்கியசாமி, மற்றும் உதவி பங்கு தந்தைகள் லிபியின் ஆரோக்கியம், பெனடிக், இன்பாண்ட் டோனி பால் மற்றும் பெங்களூரு பகுதியை சேர்ந்த அருட்தந்தை சகாயநாதன், உட்பட அருட்தந்தையர்களின் கூட்டு பாடற் திருப்பலி நடைபெற்றது.

பின்பு திருத்தேர் மந்திரிக்கப்பட்டு கோவில் வளாகம் முழுவதும் பவனி வந்தது. அனைவருக்கும் மந்திரிக்கப்பட்ட வேண்டுதல் உணவு வழங்கப்பட்டது இந்த நிகழ்வில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story