பூமீஸ்வரர் கோயிலில் தேரோட்டம்

பூமீஸ்வரர் கோயிலில் தேரோட்டம்

பூமீஸ்வரர் கோயிலில் தேரோட்டம்

கடியாபட்டி பிரம வித்யாநாயகி திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
திருமயம் அருகே உள்ள கடியாபட்டி பிரம வித்யாநாயகி திருவிழா கடந்த தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. முதல்நாள் நிகழ்ச்சியை பிராமணர் சங்கத்தினர் தொடர்ந்து நடத்தினர்.மண்டகாபடிதரர் சார்பில் தினமும் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு வீதியுலா நடந்து வந்தது. முக்கிய விழாவான தேரோட்டம் நடந்தது. விநாயகர் வள்ளி தெய்வானை சமோ சுப்பிரமணியர் பூமிஸ்வரர் வித்யாநாயகி சண்டிகேஸ்வரர் சுவாமி 5 தேர்களில் தனித்தனியாக எழுத்தருள கடியா பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சோர்த்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர். தேர்கள் கோயிலை சுற்றி வலம் வந்து 5 மணிக்கு நிலையை அடைந்தன. ஊராட்சி தலைவர் உமாமகேஸ்வரி முன்னாள் தலைவர் சோம சுந்தரம், பிராமணர் சங்கத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் நகரத்தார் கலந்து கொண்டனர். விழா ஏற் பாடுகளை கடியாபட்டி நகரத்தார் செய்திருந்தனர்.

Tags

Next Story